New Mozilla 4.0 Browser
http://www.mozilla.com/en-US/products/download.html
| பயர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள் |
பொதுவாக பயர்பொக்ஸ் முதல் முறையாக திறக்கப்படும் பொழுது மெதுவாக இயங்கும். சிலருக்கு எப்போதும் மெதுவாக இயங்கலாம். சில வழிமுறைகளின் மூலம் ஏற்கனவே இயங்கிய வேகத்தை விட சற்று அதிகப்படுத்தலாம். 1. பார்த்த பக்கங்களின் வரலாறை நீக்குதல்: நீங்கள் வலை உலவியில் உலவிய பக்கங்களைப் பற்றிய வரலாறும் ஒவ்வொரு இணையதளங்களாலும் ஏற்படுத்தப்படுகிற குக்கிகளும் அதிகமாக சேர்ந்து விடுவது பயர்பொக்சின் வேகத்தைக் குறைக்கலாம். அதனால் அடிக்கடி Clear History கொடுத்து வரலாறை நீக்கி விடுங்கள். Tools->Options சென்று இதனைச் செய்யலாம். 2. புக்மார்க்குகளை குறைத்தல்: ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த இணையதளங்களை புக்மார்க் செய்து வைப்பர். இது பின்னாளில் எளிதாக அந்த இணையதளத்தை அணுக உதவியாக இருக்கும். ஆனால் அதிகமான எண்ணிக்கையில் புக்மார்க்குகள் சேர்ந்து விடுவது பயர்பொக்ஸ் ஆரம்பிக்கும் வேகத்தைக் குறைக்கிறது. எனவே முக்கிய இணையதளங்களை மட்டும் வைத்துக் கொள்வது நலமானது. 3. ஆட் ஆன் தொகுப்புகள்: பயர்பொக்சின் சிறப்பே அதன் ஆட் ஆன் தொகுப்புகள் தான். ஆட் ஆன் தொகுப்புகள் உலவிக்கு மேம்பட்ட சிறப்பைக் கொடுக்கிறது. பல வேலைகளுக்குப் பயன்படும் ஆட் ஆன் தொகுப்புகளும் அளவான எண்ணிக்கையில் வைத்துக் கொள்ள வேண்டும். பயன்படுத்தாத ஆட் ஆன் தொகுப்புகளை நீக்கி விட வேண்டும். இந்த தரவுத்தளத்தில் உள்ள தகவல்களை நீக்க ஒரு சிறப்பான ஆட் ஆன் உள்ளது. Vacuum Places என்ற இந்த ஆட் ஆன் பயர்பொக்ஸ் ஆரம்பிக்கும் ஒவ்வொரு 30 வது தடவைக்கும் தானாகவே Places தரவுத்தளத்தில் உள்ள தகவல்களை அழித்துவிடும். |
Created By TT
